ஈமப் புறங்காட் டெரியாடும் எழிலார் தில்லை இனிதமர்வார் சேமப் புலவர் தொழும்ஒற்றித் திகழுந் தியாகப் பெருமானார் வாமப் பாவை யொடும்பவனி வந்தார் என்றார் அதுகாண்பான் காமப் பறவை போல்என்மனம் கடுகி அவர்முன் சென்றதுவே