ஈயெனப் பறந்தேன் எறும்பென உழன்றேன் எட்டியே எனமிகத் தழைத்தேன் பேயெனச் சுழன்றேன் பித்தனே எனவாய்ப் பிதற்றொடும் ஊர்தொறும் பெயர்ந்தேன் காயெனக் காய்த்தேன் கடையென நடந்தேன் கல்லெனக் கிடந்தனன் குரைக்கும் நாயெனத் திரிந்தேன் என்னினும் உனையே நம்பினேன் கைவிடேல் எனையே