ஈர்ந்தேன் அளிசூழ் ஒற்றிஉளார் என்கண் மணியார் என்கணவர் வார்ந்தேன் சடையார் மாலையிட்டும் வாழா தலைந்து மனமெலிந்து சோர்ந்தேன் பதைத்துத் துயர்க்கடலைச் சூழ்ந்தேன் இன்னும் துடிக்கின்றேன் கூர்ந்தேன் குழலாய் என்னடிஎன் குறையை எவர்க்குக் கூறுவனே