ஈறி லாதநின் அருள்பெற எனக்கினும் எத்தனை நாட்செல்லும் மாறி லாதவர் மனத்தொளிர் சோதியே மயில்மிசை வரும்வாழ்வே துஎறி லாவளச் சோலைசூழ் தணிகைவாழ் சுத்தசின் மயத்தேவே ஊறி லாப்பெரு நிலையஆ னந்தமே ஒப்பிலான் அருட்பேறே