உடம்பார் உறுமயிர்க் கால்புழை தோறனல் ஊட்டிவெய்ய விடம்பாச் சியஇருப் பூசிகள் பாய்ச்சினும் மெத்தென்னும்இத் தடம்பார் சிறுநடைத் துன்பஞ்செய் வேதனைத் தாங்கரிதென் கடம்பாநற் பன்னிரு கண்ணா இனிஎனைக் காத்தருளே