உடம்பொரு வயிறாய்ச் சருக்கரை கலந்த உண்டியே உண்டனன் பலகால் கடம்பெறு புளிச்சோ றுண்டுளே களித்தேன் கட்டிநல் தயிரிலே கலந்த தடம்பெறு சோற்றில் தருக்கினேன் எலுமிச் சம்பழச் சோற்றிலே தடித்தேன் திடம்பெறும் மற்றைச் சித்திரச் சோற்றில் செருக்கினேன் என்செய்வேன் எந்தாய்