உடல்குளிர உயிர்தழைக்க உணர்ச்சி ஓங்க உளங்கனிய மெய்யன்பர் உள்ளத் தூடே கடலனைய பேரின்பம் துளும்ப நாளும் கருணைமலர்த் தேன்பொழியும் கடவுட் காவே விடலரிய எம்போல்வார் இதயந் தோறும் வேதாந்த மருந்தளிக்கும் விருந்தே வேதம் தொடலரிய வெளிமுழுதும் பரவி ஞானச் சோதிவிரித் தொளிர்கின்ற சோதித் தேவே