உடைஉ டுத்திட இடைமறந் தாலும் உலகு ளோர்பசிக் குணமறந் தாலும் படையெ டுத்தவர் படைமறந் தாலும் பரவை தான்அலைப் பதுமறந் தாலும் புடைஅ டுத்தவர் தமைமறந் தாலும் பொன்னை வைத்தஅப் புதைமறந் தாலும் நடைஅ டுத்தவர் வழிமறந் தாலும் நமச்சி வாயத்தை நான்மற வேனே