உடைகொள் கோவணத் துற்றஅ ழகரே படைகொள் சூலப் படம்பக்க நாதரே கடைகொள் நஞ்சுண்டு கண்டமிக றுத்தநீர் இடையில் ஒற்றிவிட் டெங்கனம் சென்றிரோ