உடைமையைத் தெனக்கின் றருள்செயா விடினும் ஒப்பிலாய் நின்னடிக் கெனையே அடைமைவைத் தேனும் நின்அருட் பொருள்இங் களித்திட வேண்டும்இன் றெவைக்கும் கடைமையேன் வேறோர் தேவரை அறியேன் கடவுள்நின் திருவடி அறிக படைமைசேர் கரத்தெம் பசுபதி நீயே என்உளம் பார்த்துநின் றாயே