உடையஅம் பலத்தில் ஒருவனே என்றன் உயிர்க்குயிர் ஆகிய ஒளியே கடையன்நான் நனவில் நடுங்கிய நடுக்கம் கணக்கிலே சிறிதுறும் கனவில் இடையுறு நடுக்கம் கருதவும் சொலவும் எண்ணவும் எழுதவும் படுமோ நடையுறு சிறியேன் கனவுகண் டுள்ளம் நடுங்கிடா நாளும்ஒன் றுளதோ