உடையானை அருட்சோதி உருவி னானை ஓவானை மூவானை உலவா இன்பக் கொடையானை என்குறைதீர்த் தென்னை ஆண்டு கொண்டானைக் கொல்லாமை குறித்தி டாரை அடையானைத் திருசிற்றம் பலத்தி னானை அடியேனுக் கருளமுதம் அளிக்க வேபின் இடையானை என்னாசை எல்லாந் தந்த எம்மானைக் கண்டுகளித் திருக்கின் றேனே -------------------------------------------------------------------------------- இறை திருக்காட்சி எழுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்