உடையாய் திருஅம் பலத்தாடல் ஒருவா ஒருவா உலவாத கொடையாய் எனநான் நின்றனையே கூவிக் கூவி அயர்கின்றேன் தடையா யினதீர்த் தருளாதே தாழ்க்கில் அழகோ புலைநாயிற் கடையாய்த் திரிந்தேன் கலங்குதல்சம் மதமோ கருணைக் கருத்தினுக்கே
உடையாய் எனக்குப் புரிந்த தயவை உன்ன உன்ன வே உடம்பு பூரிக் கின்ற தொளிர்பொன் மலைய தென்ன வே தடையா தினிஉள் மூல மலத்தின் தடையும் போயிற் றே சமய விகற்பம் எல்லாம் நீங்கிச் சமம தாயிற் றே எனக்கும் உனக்கும்