உடையாய்உன் அடியவர்க்கும் அவர்மேல் பூண்ட ஒண்மணியாம் கண்மணிக்கும் ஓங்கு சைவ அடையாளம் என்னஒளிர் வெண்ணீற் றுக்கும் அன்பிலேன் அஞ்சாமல் அந்தோ அந்தோ நடையாய உடல் முழுதும் நாவாய் நின்று நவில்கின்றேன் என்பாவி நாவைச் சற்றும் இடையாத கொடுந்தீயால் சுடினும் அன்றி என்செயினும் போதாதே எந்தாய் எந்தாய்