உடையார் உலகிற் காசென்பார்க் கொன்றும் உதவார் ஆனாலும் அடையார்க் கரியார் வேண்டார்க்கே அருள்வார் வலிய ஆனாலும் படையார் கரத்தர் பழிக்கஞ்சாப் பாசு பதரே ஆனாலும் கடையா அமுதே நான்அவர்மேல் காதல் ஒழியேன் கனவினுமே டீயஉம -------------------------------------------------------------------------------- ஆற்றா விரகம் தோழியொடு கூறல் --- திருவொற்றியூர் அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்