உட்டிகழ்ந்த மேலவனே ஒற்றியூர் உத்தமனே மட்டிலங்கும் உன்றன் மலரடியைப் போற்றாது தட்டிலங்கு நெஞ்சத்தால் சஞ்சலித்துன் சந்நிதிக்கண் எட்டிநின்று பார்க்கும்இந்த ஏழைமுகம் பாராயோ