உணர்ந்துணர்ந் தாங்கே உணர்ந்துணர்ந் துணரா உணர்ந்தவர் உணர்ச்சியான் நுழைந்தே திணர்ந்தனர் ஆகி வியந்திட விளங்கும் சிவபதத் தலைவநின் இயலைப் புணர்ந்தநின் அருளே அறியும்நான் அறிந்து புகன்றிடும் தரஞ்சிறி துளனோ கொணர்ந்தொரு பொருள்என் கரங்கொளக் கொடுத்த குருஎனக் கூறல்என் குறிப்பே எண்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்