உண்டநஞ் சின்னும் கண்டம்விட் டகலா துறைந்தது நாடொறும் அடியேன் கண்டனன் கருணைக் கடல்எனும் குறிப்பைக் கண்டுகண் டுளமது நெகவே விண்டனன் என்னைக் கைவிடில் சிவனே விடத்தினும் கொடியன்நான் அன்றோ அண்டர்கட் கரசே அம்பலத் தமுதே அலைகின்றேன் அறிந்திருந் தனையே