உண்டேர்என போல்துய ரால்அலை கின்றவர் உத்தமநீ கண்டோ ர் சிறிதும் இரங்குகி லாய்இக் கடையவனேன் பண்டோ ர் துணைஅறி யேன்நின்னை யன்றிநிற் பற்றிநின்றேன் எண்டோ ள் மணிமிடற் றெந்தாய் கருணை இருங்கடலே