உண்டோ எனைப்போல் மதிஇழந்தோர் ஒற்றி அப்பா உன்னுடைய திண்டோ ள் இலங்கும் திருநீற்றைக் காண விரும்பேன் சேர்ந்தேத்தேன் எண்தோள் உடையாய் என்றிரங்கேன் இறையும் திரும்பேன் இவ்வறிவைக் கொண்டே உனைநான் கூடுவன்நின் குறிப்பே தொன்றும் அறியேனே