உண்ணி றைந்தெனை ஒளித்திடும் ஒளியை உண்ண உண்ணமேல் உவட்டுறா நறவைக் கண்ணி றைந்ததோர் காட்சியை யாவும் கடந்த மேலவர் கலந்திடும் உறவை எண்ணி றைந்தமால் அயன்முதல் தேவர் யாரும் காண்கிலா இன்பத்தின் நிறைவை நண்ணி ஒற்றியூர் அமர்ந்தருள் சிவத்தை நமச்சி வாயத்தை நான்மற வேனே