உண்ணு கின்றதும் உறங்குகின் றதும்மேல் உடுத்து கின்றதும் உலவுகின் றதும்மால் நண்ணு கின்றதும் நங்கையர் வாழ்க்கை நாடு கின்றதும் நவையுடைத் தொழில்கள் பண்ணு கின்றதும் ஆனபின் உடலைப் பாடை மேலுறப் படுத்துகின் றதும்என் றெண்ணு கின்றதோ றுளம்பதைக் கின்றேன் என்செய் கேன்நர கிடைஇடும் போதே