உண்மையுரைக் கின்றேன்இங் குவந்தடைமின் உலகீர் உரைஇதனில் சந்தேகித் துளறிவழி யாதீர் எண்மையினான் எனநினையீர் எல்லாஞ்செய் வல்லான் என்னுள்அமர்ந் திசைக்கின்றான் இதுகேண்மின் நீவிர் தண்மையொடு சுத்தசிவ சன்மார்க்க நெறியில் சார்ந்துவிரைந் தேறுமினோ சத்தியவாழ் வளிக்கக் கண்மைதரும் ஒருபெருஞ்சீர்க் கடவுள்எனப் புகலும் கருணைநிதி வருகின்ற தருணம்இது தானே