உத்தர ஞான சித்திமா புரத்தின் ஓங்கிய ஒருபெரும் பதியை உத்தர ஞான சிதம்பர ஒளியை உண்மையை ஒருதனி உணர்வை உத்தர ஞான நடம்புரி கின்ற ஒருவனை உலகெலாம் வழுத்தும் உத்தர ஞான சுத்தசன் மார்க்கம் ஓதியைக் கண்டுகொண் டேனே
உத்தர ஞான சிதம்பர மே சித்திஎ லாந்தரும் அம்பரமே