உந்து மருத்தோ டைம்பூதம் ஆனார் ஒற்றி யூர்அமர்ந்தார் இந்து மிருத்தும் சடைத்தலையார் என்பால் இன்னும் எய்திலரே சந்து பொறுத்து வார்அறியேன் தமிய ளாகத் தளர்கின்றேன் சிந்துற் பவத்தாய் என்னடிநான் செய்வ தொன்றும் தெரிந்திலனே