உன்ஆணை உன்னைவிட உற்றதுணை வேறிலைஎன் உடையாய் அந்தோ என்நாணைக் காத்தருளி இத்தினமே அருட்சோதி ஈதல் வேண்டும் அந்நாள்நை யாதபடி அருள்புரிந்த பெருங்கருணை அரசே என்னை முன்னாள்நின் அடியவன்என் றுலகறிந்த இந்நாள்என் மொழிந்தி டாதே