உன்கடன் அடியேற் கருளல்என் றுணர்ந்தேன் உடல்பொருள் ஆவியும் உனக்கே பின்கடன் இன்றிக் கொடுத்தனன் கொடுத்த பின்னும்நான் தளருதல் அழகோ என்கடன் புரிவேன் யார்க்கெடுத் துரைப்பேன் என்செய்வேன் யார்துணை என்பேன் முன்கடன் பட்டார் போல்மனம் கலங்கி முறிதல்ஓர் கணம்தரி யேனே