உன்மனியின் உள்ளகத்தே ஒளிருவதொன் றாகி உற்றஅதன் வெளிப்புறத்தே ஓங்குவதொன் றாகிச் சின்மயமாய் விளங்குகின்ற திருவடிகள் வருந்தச் சிறுநாயேன் பொருட்டாகத் தெருவில்நடந் தருளிப் பொன்மயமாந் திருமேனி விளங்கஎன்பால் அடைந்து பொருள்ஒன்றென் கைதனிலே பொருந்தஅளித் தனையே நின்மலனே நின்னருளை என்புகல்வேன் பொதுவில் நிறைந்தஇன்ப வடிவாகி நிருத்தம்இடும் பதியே