உம்பருக்குங் கிடைப்பரிதாம் மணிமன்றில் பூத உருவடிவங் கடந்தாடுந் திருவடிக ளிடத்தே செம்பருக்கைக் கல்லுறுத்தத் தெருவில்நடந் திரவில் தெருக்கதவந் திறப்பித்துச் சிறியேனை அழைத்து வம்பருக்குப் பெறலரிதாம் ஒருபொருள்என் கரத்தே மகிழ்ந்தளித்துத் துயர்தீர்ந்து வாழ்கஎன உரைத்தாய் இம்பருக்கோ அம்பருக்கும் இதுவியப்பாம் எங்கள் இறைவநின தருட்பெருமை இசைப்பதெவன் அணிந்தே