உம்பர் வான்துயர் ஒழித்தருள் சிவத்தை உலகெ லாம்புகழ் உத்தமப் பொருளைத் தம்ப மாய்அகி லாண்டமும் தாங்கும் சம்பு வைச்சிவ தருமத்தின் பயனைப் பம்பு சீரருள் பொழிதரு முகிலைப் பரம ஞானத்தைப் பரமசிற் சுகத்தை நம்பி னோர்களை வாழ்விக்கும் நலத்தை நமச்சி வாயத்தை நான்மற வேனே