உயத்திடம் அறியா திறந்தவர் தமைஇவ் வுலகிலே உயிர்பெற்று மீட்டும் நயத்தொடு வருவித் திடும்ஒரு ஞான நாட்டமும் கற்பகோ டியினும் வயத்தொடு சாகா வரமும்என் தனக்கே வழங்கிடப் பெற்றனன் மரண பயத்தைவிட் டொழித்தேன் எனக்கிது போதும் பண்ணிய தவம்பலித் ததுவே