உயிரு ளுறைவீர் திருவொற்றி யுள்ளீர் நீரென் மேற்பிடித்த வயிர மதனை விடுமென்றேன் மாற்றா ளலநீ மாதேயாஞ் செயிர தகற்றுன் முலைப்பதிவாழ் தேவ னலவே டெளியென்றார் அயிர மொழியா யென்னடியவ் வையர் மொழிந்த வருண்மொழியே
உயிரு ளுறைவீர் திருவொற்றி யுடையீர் நீரென் மேற்பிடித்த வயிர மதனை விடுமென்றேன் வயிரி யலநீ மாதேயாஞ் செயிர தகற்றுன் முலையிடங்கொள் செல்வ னலகாண் டெளியென்றே யியல்கொண் முறுவல் புரிகின்றா ரிதுதான் சேடி யென்னேடீ