உயிர்அனு பவம்உற் றிடில்அத னிடத்தே ஓங்கருள் அனுபவம் உறும்அச் செயிரில்நல் அனுப வத்திலே சுத்த சிவஅனு பவம்உறும் என்றாய் பயிலுமூ வாண்டில் சிவைதரு ஞானப் பால்மகிழ்ந் துண்டுமெய்ந் நெறியாம் பயிர்தழைந் துறவைத் தருளிய ஞான பந்தன்என் றோங்குசற் குருவே