உரியபெருந் தனித்தலைவர் ஓங்குசடாந் தத்தின் உட்புறத்தும் அப்புறத்தும் ஒருசெங்கோல் செலுத்தும் துரியர்துரி யங்கடந்த சுகசொருபர் பொதுவில் சுத்தநடம் புரிகின்ற சித்தர்அடிக் கழலே பெரியபதத் தலைவர்எலாம் நிற்குநிலை இதுஓர் பெண்உரைஎன் றெள்ளுதியோ கொள்ளுதியோ தோழி அரியபெரும் பொருள்மறைகள் ஆகமங்கள் உரைக்கும் ஆணையும்இங் கீதிதற்கோர் ஐயம்இலை அறியே