உருத்திரர்கள் ஒருகோடி நாரணர்பல் கோடி உறுபிரமர் பலகோடி இந்திரர்பல் கோடி பெருத்தமற்றைத் தேவர்களும் முனிவர்களும் பிறரும் பேசில்அனந் தங்கோடி ஆங்காங்கே கூடித் திருத்தமுறு திருச்சபையின் படிப்புறத்தே நின்று தியங்குகின்றார் நடங்காணும் சிந்தையராய் அந்தோ வருத்தமொன்றும் காணாதே நான்ஒருத்தி ஏறி மாநடங்காண் கின்றேன்என் மாதவந்தான் பெரிதே