உருத்திரர்நா ரணர்பிரமர் விண்ணோர் வேந்தர் உறுகருடர் காந்தருவர் இயக்கர் பூதர் மருத்துவர்யோ கியர்சித்தர் முனிவர் மற்றை வானவர்கள் முதலோர்தம் மனத்தால் தேடிக் கருத்தழிந்து தனித்தனியே சென்று வேதங் களைவினவ மற்றவையுங் காணேம் என்று வருத்தமுற்றாங் கவரோடு புலம்ப நின்ற வஞ்சவெளி யேஇன்ப மயமாம் தேவே