உருத்துள் இகலும் சூர்முதலை ஒழித்து வானத் தொண்பதியைத் திருத்தும் அரைசே தென்தணிகைத் தெய்வ மணியே சிவஞானம் அருத்தும் நினது திருவருள்கொண் டாடிப் பாடி அன்பதனால் கருத்துள் உருகி நின்உருவைக் கண்கள் ஆரக் கண்டிலனே