உருமத்தி லேபட்ட புன்புழுப் போல்இவ் உலகநடைக் கருமத்தி லேபட்ட என்மனந் தான்நின் கழலடையும் தருமத்தி லேபட்ட தின்றேஎன் றெண்ணுந் தனையுமந்தோ மருமத்தி லேபட்ட வாளியைப் போன்று வருத்துவதே