உருவமும் அருவமும் உபயமும் உளதாய் உளதில தாய்ஒளிர் ஒருதனி முதலே கருவினில் எனக்கருள் கனிந்தளித் தவனே கண்ணுடை யாய்பெருங் கடவுளர் பதியே திருநிலை பெறஎனை வளர்க்கின்ற பரமே சிவகுரு துரியத்தில் தெளிஅனு பவமே தருவளர் பொழிவடல் சபைநிறை ஒளியே தனிநட ராசஎன் சற்குரு மணியே