உருவாகி உருவினில்உள் உருவ மாகி உருவத்தில் உருவாகி உருவுள் ஒன்றாய் அருவாகி அருவினில்உள் அருவ மாகி அருவத்தில் அருவாகி அருவுள் ஒன்றாய்க் குருவாகிச் சத்துவசிற் குணத்த தாகிக் குணரகிதப் பொருளாகிக் குலவா நின்ற மருவாகி மலராகி வல்லி யாகி மகத்துவமாய் அணுத்துவமாய் வயங்குந் தேவே