உருவும் உணர்வும்செய் நன்றி - அறி உளமும் எனக்கே உதவிய தன்றித் திருவும் கொடுத்தது பாரீர் - திருச் சிற்றம் பலத்தே திருநட ஸோதி ஸோதி
உருவும் அருவும் உபய நிலையும் உடைய நித்த னே உயிருள் நிறைந்த தலைவ எல்லாம் வல்ல சித்த னே மருவும் துரிய வரையுள் நிறைந்து வயங்கும் பரம மே மன்றில் பரமா னந்த நடஞ்செய் கின்ற பிரம மே எனக்கும் உனக்கும்