உருவுள மடவார் தங்களை நான்கண் ணுற்றபோ துளநடுக் குற்றேன் ஒருவுளத் தவரே வலிந்திட வேறோர் உவளகத் தொளித்தயல் இருந்தேன் கருவுளச் சண்டைக் கூக்குரல் கேட்ட காலத்தில் நான்உற்ற கலக்கம் திருவுளம் அறியும் உரத்தசொல் எனது செவிபுகில் கனல்புகு வதுவே