உருவெளியே உருவெளிக்குள் உற்றவெளி உருவே உருநடுவும் வெளிநடுவும் ஒன்றான ஒன்றே பெருவெளியே பெருவெளியில் பெருஞ்சோதி மயமே பெருஞ்சோதி மயநடுவே பிறங்குதனிப் பொருளே மருஒழியா மலர்அகத்தே வயங்குஒளி மணியே மந்திரமே தந்திரமே மதிப்பரிய மருந்தே திருஒழியா தோங்குமணி மன்றில்நடத் தரசே சிறுமொழிஎன் றிகழாதே சேர்த்துமகிழ்ந் தருளே