உரைகடந்த திருவருட்பே ரொளிவடிவைக் கலந்தே உவட்டாத பெரும்போகம் ஓங்கியுறும் பொருட்டே இரைகடந்தென் உள்ளகத்தே எழுந்துபொங்கித் ததும்பி என்காதல் பெருவெள்ளம் என்னைமுற்றும் விழுங்கிக் கரைகடந்து போனதினித் தாங்கமுடி யாது கண்டுகொள்வாய் நீயேஎன் கருத்தின்வண்ணம் அரசே திரைகடந்த குருமணியே சிவஞான மணியே சித்தசிகா மணியேஎன் திருநடநா யகனே