உறங்கு கின்றதும் விழிப்பதும் மகிழ்வாய் உண்ணு கின்றதும் உடுப்பதும் மயக்குள் இறங்கு கின்றதும் ஏறுகின் றதுமாய் எய்க்கின் றேன்மனம் என்னினும் அடியேன் அறங்கொள் நும்அடி அரண்என அடைந்தேன் அயர்வு தீர்த்தெனை ஆட்கொள நினையீர் புறங்கொள் காட்டகத் தீர்ஒற்றி உடையீர் பொய்யன் என்னில்யான் போம்வழி எதுவோ