உறவே எனதின் னுயிரேஎன் உள்ளத்தில் உற்றினிக்கும் நறவே அருட்பெருஞ் சோதிமன் றோங்கு நடத்தரசே இறவேன் எனத்துணி வெய்திடச் செய்தனை என்னைஇனி மறவேல் அடிச்சிறி யேன்ஒரு போது மறக்கினுமே