உறியிலே தயிரைத் திருடிஉண் டனன்என் றொருவனை உரைப்பதோர் வியப்போ குறியிலே அமைத்த உணவெலாம் திருடிக் கொண்டுபோய் உண்டனன் பருப்புக் கறியிலே பொரித்த கறியிலே கூட்டுக் கறியிலே கலந்தபே ராசை வெறியிலே உனையும் மறந்தனன் வயிறு வீங்கிட உண்டனன் எந்தாய்