உறுவினை தவிர்க்கும் ஒருவனே உலகில் ஓடியும் ஆடியும் உழன்றும் சிறுவர்தாம் தந்தை வெறுப்பஆர்க் கின்றார் சிறியனேன் ஒருதின மேனும் மறுகிநின் றாடி ஆர்த்ததிங் குண்டோ நின்பணி மதிப்பலால் எனக்குச் சிறுவிளை யாட்டில் சிந்தையே இலைநின் திருவுளம் அறியுமே எந்தாய்