உறைந்திடும்ஐங் கருவினிலே உருவசத்தி விகற்பம் உன்னுதற்கும் உணர்வதற்கும் ஒண்ணாஎண் ணிலவே நிறைந்தஅவை தனித்தனியே நிகழ்ந்திலங்க அவைக்குள் நேர்மைஒண்மை உறுவித்தந் நேர்மைஒண்மை அகத்தே குறைந்திலவாம் பலவேறு குணங்கள்உறப் புரிந்து குணங்களுளே குறிகள்பல கூட்டுவித்தாங் கமர்ந்தே மறைந்தமணம் வெளிப்படுத்தும் மலரடியின் பெருமை வகுத்துரைக்க வல்லவரார் வழுத்தாய்என் தோழி