உறைந்து வஞ்சர்பால் குறையிரந் தவமே உழல்கின் றாய்இனி உரைக்கும்இப் பொழுதும் குறைந்து போகின்ற தெழுதிஎன் நெஞ்சே குலவும் ஒற்றியம் கோநகர்க் கேகி நிறைந்த சண்முக குருநம சிவஓம் நிமல சிற்பர அரகர எனவே அறைந்து போற்றுதும் ஐயுறல் என்மேல் ஆணை காண்அவர் அருள்பெறல் ஆமே திருச்சிற்றம்பலம் நமச்சிவாய சங்கீர்த்தன லகரி திருவொற்றியூரும் திருத்தில்லையும் எண்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம் திருச்சிற்றம்பலம்